
எனது “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்”
சென்னை புத்தகவிழா-2015 தொடங்குவதற்குமுன் என் கட்டுரைகளின் முழுத்தொகுப்பு ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ வம்சி புக்ஸ் வெளியீடாக வந்துவிடும். Hardcover-ல் 560 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.550. இதுவரை பல பத்திரிகைகளில் நான் எழுதிய எல்லா கட்டுரைகள், பதிவுகள், என் நேர்காணல்கள், புத்தக விமர்சனங்கள், பல பிரபலங்கள் என்னைப்பற்றி அள்ளித்தெளித்திருக்கும் பொய்கள் எல்லாமே இதில் உண்டு! இமயமலைக்குப்போய் உடலை வருத்தி தனியாக தவம் செய்து எழுதிய எழுத்து என்றெல்லாம் பீலா விடமாட்டேன்! ஆனால் இதன் Readability-க்கு நான் கேரன்ட்டீ!
I am a One Book Wonder! எழுத்தாளன் என்கிற புது வேடம் எனக்குப் பிடித்திருந்தாலும், இனி என் வாழ்நாளில் இன்னொரு புத்தகம் நிச்சயமாக வராது. என் பழைய தொகுப்பான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தின் இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிகளைநானே உயிர்மையிலிருந்து வாங்கி, பார்க்கும் நண்பர்களுக்கெல்லாம் ‘தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி கொடுத்த எலுமிச்சம்பழம் போல வினியோகித்திருக்கிறேன். இப்போது அது இயலாது. ஆகவே என் வாசக நண்பர்கள் அனைவரும் புத்தக விழாவிலேயே ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ தொகுப்பை வாங்கிவிட வேண்டுமென்று வேண்டுகிறேன். அதில் எத்தனை கையெழுத்து வேண்டுமானாலும் — ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் — இலவசம்!
உங்கள் புத்தக அலமாரியில் நிரந்தரமாக இருந்து உங்களைப் பார்க்கும்போதெல்லாம் பயமுறுத்தவேண்டும். அதற்காகவே என் கையெழுத்திட்ட ஒரு பிரதி அங்கே இருக்கவேண்டும்!
Happy Reading!
பாரதிமணி
0 comments:
Post a Comment