Friday, January 22, 2016

சுஜாதாவின் முன்னுரை…
‘கடவுள் வந்திருந்தார்’, ‘அடிமைகள்’, ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ‘ஊஞ்சல்’, ‘அன்புள்ள அப்பா’, ‘சிங்கமையங்கார் பேரன்’, ‘பாரதி இருந்த வீடு’ இவைகள் அனைத்தையும் பூர்ணம் அவர்கள் பல நகரங்களில் பல மேடைகளில் சிறப்பாக நடித்துக் காட்டினார். ‘கடவுள் வந்திருந்தார்’ அமெச்சூர் குழுவினரால் உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் மேடையேற்றப்பட்டுள்ளது.
எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு!
தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக் கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.
கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், மேலே போன சுஜாதா எழுதித் தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்.

0 comments:

Post a Comment