Friday, January 22, 2016

இன்று ஓவியர் ரஷ்மி வரைந்த நண்பர் குளச்சல் மு. யூசுப் அவர்களின் வரைபடத்தை போட்டிருந்தார்.  அதையொட்டிய ஃபேஸ்புக் உரையாடல்களை கீழே கொடுத்திருக்கிறேன். இது எங்கள் தனி நபர் உரையாடல் அல்ல. முகநூலில் வந்திருக்கிறது. இதில் ஓர் எழுத்தாளனின் வலி தெரிகிறது.  பஷீர் போன்ற மலையாள இலக்கியத்தை தொடர்ந்து தமிழுக்கு தருபவர் குளச்சலார். அவரது வலியை என்னைப்போலவே உங்களாலும் உணரமுடியும்!
இனி, எங்கள் உரையாடல்:
Bharati Mani அளகாவே இருக்கீரு…..வே! என்னா பர்ஸ்னால்ட்டி!
    • Kulachal Mu Yoosuf ஐயா, நீங்க இதுக்கு ரஷ்மிக்கில்லையா பாராட்டுத் தெரிவிக்கணும்?
    • Bharati Mani ரஷ்மியை எனக்கு சித்திரத்தில் தான் தெரியும். பெரிய பெயரை ரஷ்மினு சுருக்கி வெச்சிருக்கார்லெ? நல்ல ஸாயிபு களை வந்திருச்சு! ரொம்ப நல்லா இருக்கு!
  •   Kulachal Mu Yoosuf முதல் விஷயம், ஓவியத்தில ஸாயிபு களைங்கிறதே முரண்பாடானது. அடுத்து, இப்படியான களையை எனக்கு உருவாக்கிப் பார்த்ததும் இலக்கிய உலகம்தான். அப்படியே இருந்தாத்தான் என்ன தப்புங்கிறதுக்காக நானும் அதையே பராமரிச்சிடுறதா முடிவு பண்ணிட்டேன். என்ன, கொஞ்சம் பயந்து வாழணும், அவ்வளவுதானே? வாழ்ந்துட்டுப் போறது. சு.ராவுக்கு என்ன களையிருக்குறதா இலக்கிய உலகம் சொல்லிட்டுருந்தது என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியாதா என்ன? சாயம் தீட்டுறதுல நாம யாருக்கும் சளைச்சவங்க இல்லையே?
    • Bharati Mani ஐயா! நான் அந்தக்காலத்தவன். என் தந்தை அவர் நண்பரை, ‘வாரும்வே…..எடலாக்குடி சாயிபூ” என்று கூப்பிடும்போதே உளம் நிறையும். அவர் வீட்டுக்குள் வந்து உட்காருமுன் உள்ளேயிருந்து அம்மா கொடுக்கும் காபியைக் கொண்டுவருவேன்! கல்மிஷமில்லாத உலகம் அது! என் உலகமும் அது தான்!
      • Bharati Mani எனக்கு ‘பால்டிக்செல்லாம்’ தெரியாது. இனிமேல் தெரியவும் வேண்டாம்! நாம் நாமாக இருப்பதில் எந்த தப்புமில்ல! அப்படியே இருப்போம்!
    • Kulachal Mu Yoosuf தாங்கள், சு.ரா போன்றவர்களின் உலகத்தை நானும் அறிவேன். தேரூர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த, சுப்ரமணியம் கோச்சப்பிடாரத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். உங்களைப்போன்றவர்களின் கல்மிஷமில்லாத அந்த உலகத்தின் ஒரு உறுப்பினன்தான் நானும். ஆனால், அறிவுலகம் கயமை நிறைந்த சில பாடங்களை எனக்குக் கற்றுத்தர முயற்சி செய்கிறது. இருந்தாலும் நான் உங்களைப் போன்றவர்களைப் பின்பற்றவே முயற்சி செய்கிறேன். வெற்றியும் பெறுவேன்.
    • Kulachal Mu Yoosuf முக்கியமாக, தாங்கள் குறிப்பிட்ட சொல் வேறு. சில சூழல்களால் நான் பதில் சொல்ல நேர்ந்த சொல் வேறு. தங்களைப் போன்றவர்களிடம் நான் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியதில்லை. அது இயல்பாகவே நிகழ்ந்து விடும் என்பதால்.
    • Bharati Mani அப்படிப்பட்ட ‘அறிவுலகத்திலிருந்து’ விலகியே இருக்கப்பழகிக்கொண்டேன். என் தந்தை இடலாக்குடி பள்ளி உத்சவத்துக்கும், கோட்டாறு சவேரியார் விழாவுக்கும், சுசீந்திரம் கோவிலுக்கும் ஒருபோல போவார். என்னையும் அழைத்துச்செல்வார். என் குழந்தைகளையும் அப்படியே வளர்த்திருக்கிறேன். இதனால் நான் பெற்றது அனேகம்!
    • Kulachal Mu Yoosuf சில விஷயங்கள்: இதைப் பகிர்ந்துகொள்ள தங்களைப் போன்றவர்கள்தான் இன்று தகுதியானவர்கள். சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இடலாக்குடி முஸ்லிம்களினிடையே மணமகன் சீர்வரிசைகள் கடைப்பிடித்திருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மண்டைக்காடு கொடை தொடர்பாக, மணமக்கள் சீர்வரிசைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை நான் நேரடியாகவே அறிவேன். அதில் முக்கியமானவை: பொரிகடலை. சர்பத், பேரீத்தம்பழம்.
    • Bharati Mani இடலாக்குடி பள்ளி விழாவின்போது என் தந்தைக்கு தொப்பி வைத்து பரிவட்டம் கட்டி மரியாதை செய்வார்கள். கூட இருந்து சாப்பிட எங்களுக்காக வெஜிடேரியன் சாப்பாடும் இருக்கும். மதிக்கத்தெரிந்தவர்கள் காலத்தில் வாழ்ந்தவன் நான்!
    • Kulachal Mu Yoosuf ஆச்சரியமாக இருக்கு. அதைப் பற்றி எழுதுங்களேன் ஐயா.
    • Bharati Mani இதோ எழுதிவிட்டேனே……இன்னும் என்ன?
    • Kulachal Mu Yoosuf அது சரி.
    • Sadhaqathullah Hasani பாரதி மணி அவர்களின் நக்கலும் ,நையாண்டியும் தான் அவரது எழுத்தின்அடையாளமே!
    • Taj Deen //பாரதி மணி அவர்களின் நக்கலும் ,நையாண்டியும் தான் அவரது எழுத்தின்அடையாளமே!// இல்லை.., பாரதி மணி நிஜத்தின் மீதுதான் அத்தகைய நையாண்டியை நிகழ்த்துவார்.
–பாரதி மணி (Bharati Mani)  – bharatimani90 at gmail.com
(வாழ்த்துகளும் வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.)
Bharati Mani

0 comments:

Post a Comment