Monday, January 25, 2016

திரு. பாரதி மணி அவர்கள் 'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் சின்னச்சின்ன பதில்களை அவ்வப்போது எழுதுவார். அவைகளின் ஈர்ப்பு, 'உயிர்மை'யில் தொடர்ந்து இவர் எழுத்துகளை படிக்க வைத்தது. கட்டுரை முடிந்து விடுமோ என்ற பதைப்போடு அந்தக் கட்டுரைகளைப் படித்துவருவேன். தொடர்ந்து நண்பர் சுகா மூலமாக நேரில் சந்தித்தபோது, அவருடைய பல பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வங்க அதிபர் முஜிபூர் அவர்களோடு கிடைத்த அனுபவங்களை, இந்தி நடிகர் மெஹ்மூத் அவர்களிடம் நேருக்கு நேராகக் குறைகளைச் சுட்டிக் காட்டியதை அவர் விவரித்ததை அனுபவித்திருக்கிறேன். அவருடைய குஷ்வந்த் சிங் அனுபவங்கள் தனிக்கதை. பல முக்கிய பிரமுகர்களிடம் அவருக்கான அனுபவங்களை ஒப்பனையில்லாமல் அவர் விவரிக்கும்போது நம் கடிகார முட்கள் பலமுறை சுற்றி வந்திருக்கும். அவருடைய அனுபவங்கள் எல்லாமே ஆவணப்படுத்த வேண்டியவை. பேச்சில், இசை, இலக்கியம், நாடகம், சமையல், மனிதர்கள் பற்றிய விவரணைகள் தெறித்து ஓடும். டில்லி அனுபவங்களையும், அவருடைய நாடக, சினிமா அனுபவங்களையும் விவரிக்கும்போது இந்த எழுபது வயது இளைஞர் ட்ராக் சூட் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருப்பார்.

எளிமையான இந்த மனிதரை நீங்கள் சந்தித்து விட்டு வெளியே வந்தால், உங்களுடைய சில வயதுகளை இழந்திருப்பீர்கள்...!

0 comments:

Post a Comment