Friday, January 22, 2016

தன் பெயரில் ‘பாரதி’யை இணைத்துக்கொண்டவர்களின் ஒரு சங்கமம் முகநூலில் உருவாகிறது. இதில் எல்லோருமே பாரதி தான்!
எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. 
 
திரு. ஜே.ஆர்.டி. டாட்டா உயிரோடிருந்தபோது, TISCO-வின் தலைவராக ரூஸி மோடி இருந்தார். அந்தக்காலத்திலேயே கல்கத்தாவுக்கும் ஜேம்ஷெட்பூருக்கும் சொந்தவிமானத்தில் தினமும் பயணம் செய்தவர். பணக்காரராக இருந்தாலும் குறும்பும் கேலியும் நிறைந்தவர். கல்கத்தா 5 நட்சத்திர ஹோட்டல் The Grand Hotel இவர் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.  ஒவ்வொரு மாதமும், கல்கத்தா டெலிபோன் டைரக்டரியை எடுத்து, அங்கே அதிகமாக உள்ள பானர்ஜி, சாட்டர்ஜி, தாஸ்குப்தா, முகர்ஜி என்கிற வரிசையில் ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுத்து, குருட்டாம் போக்காக 100 பேருக்கு கிராண்ட் ஹோட்டல் சார்பாக Drinks & Dinner Invitations அனுப்புவார். The Grand Hotel, Calcutta is pleased to invite you to be our Honoured Guest of the Evening‘ என்றிருக்கும். வருபவர்களில் பலபேர் முதல் தடவையாக நட்சத்திர ஹோட்டலுக்கு வருபவர்களாக இருப்பார்கள். தங்களிடம் இருப்பதிலேயே சிறந்த சூட் கோட்டுடனும், பெங்காலி குர்த்தா வேஷ்டியுடனும் கூட்டம் சேரத்துவங்கும். யார் தம்மை அழைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.
 பரஸ்பர அறிமுகத்தின் போது, ‘Pleased to meet you. I am Mukherjee” என்பார் ஒருவர்.  ‘Oh! I am also Mukherjee!‘ என்பார் இன்னொருவர். கையில் கிளாஸுடன் மூன்றாமவர் ‘Nice to see you. I am Mukherjee!‘ என்று சொல்லிக்கொண்டே இவர்களை நெருங்குவார்! 
தன் வாழ்நாளிலேயே முதல் தடவையாக நட்சத்திர ஹோட்டலில் காலடி வைத்து, உயர்தர மதுவிலும், உணவிலும் சந்தோஷமாக ஒரு மாலைப் பொழுதைக் கழிக்கும் ‘முகர்ஜிகளின் சங்கமத்தை’ தூரத்தில் தனியாக உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருப்பார் ரூஸி மோடி! ‘நீயும் முகர்ஜி…….நானும் முகர்ஜி!…..
இங்கே…..நீயும் பாரதி…….நானும் பாரதி!  
–Bharati Mani

0 comments:

Post a Comment