Friday, January 22, 2016

தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் பாரதி மணி பாட்டையாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம்…
நாடகம் இன்றும் புதியதாக இருக்கிறது! பாராட்டுக்கள் சார்!
–Sa Manohar (ச.மனோகர்)
--
நேற்று எழும்பூர் மியூசியம் அரங்கில் கடவுள் வந்திருந்தாராமே? காண முடியவில்லை. இன்றும் வருவாராமே? அல்லது வந்திருந்தாராமே?
இன்று செல்வேன், இன்ஷா அல்லாஹ்..
நாடகம் மியூசியம் அருகில் நடைபெறுவதாக இருந்தாலும் அத்தனை பழமையானது அல்ல. ஏனெனில் எழுதியவர் சுஜாதா. மேலும் பிரதான பாத்திரத்தில் நடிப்பவர் சமகால சூப்பா ஸ்டார்களுள் ஒருவரான Bharati Mani ஐயா அவர்கள் என்பதால் ரசிகைகளின் கூட்டம் பொங்கி வழியும். பிளாக்கில் டிக்கெட் வாங்கியாவது இன்று பார்த்து விட வேண்டும்.
–Suresh Kannan
சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகத்தைப் பார்த்தேன். பாரதி மணியின் நடிப்பு அசாத்தியம். அப்போதே அவர் சினிமாவுக்குள் நுழைந்திருந்தால் சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பார். அவரது ரசிகர் மன்றத்தில் நானும் சேர்ந்து விட்டேன். அவரது குரல், அஸால்ட்டான பாவம், அப்பாவியான ஆளுமை, எல்லாமே பிரமாதம். காசுக்கெல்லாம் ஆசைப்படாத (!) பாரதி மணியின் இந்த நாடகத்தை தமிழ் தெரிந்தோர் எல்லாம் அவரவர் ஊர்களில் போடச் செய்தால் கடவுள் அருளால் ஊர் சுபிட்சமடையும்! அவரது மனைவி, மகள், மருமகன் பாத்திரத்தில் நடித்தவர்களும் வெகு இயல்பு.
சென்னை மியூஸியம் அரங்கத்தில் இரண்டாவதாக நாளாக இன்றும் நாடகத்தைக் காணப் போகிறேன். நீங்களும் வாருங்கள். அனுமதியும், ஏ.சி.யும், கூடை நிறைய புன்னகையும் இலவசம்.
–Priya Kalyanaraman
இப்போதுதான் திரு பாரதி மணி அவர்களின் கடவுள் வந்திருந்தார் பார்த்துவிட்டு திரும்பினேன். பன்னிரண்டு காட்சிகள் இருந்தால், ஒவ்வொரு காட்சிக்குப்பிறகும் கைதட்டல். காட்சிகளின் இடையிலும் வசனங்களுக்காக கைதட்டல் என்று play ஜோராகச்சென்றது. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாள் எழுதினது, இன்றும் Relevant ஆக இருப்பது வாத்யாரின் நூற்றுக்கணக்கான strengthகளில் ஒன்று. ஒவ்வொரு aspect ஆகக்குடல்லாப்ரேஷன் பண்ணுவது அநியாயம். இதில் முக்கியமானது அந்த வயதானவரின் நாடக மற்றும் சுஜாதா மீதான அபிமானம், அதற்காக அவர் போட்டிருக்கும் உழைப்பு. நம்மில் எத்தனை பேர் இந்த வயதில் இத்தனை passion உடன் செய் திருக்க முடியும்? Hats off to பாரதி மணி சார்! எழுதிவிட்டுப்போய்விட்ட அந்த பிரம்ம ராக்ஷசனைப்பற்றி என்ன சொல்ல முடியும்!
–Jayaraman Raghunathan
பாட்டையாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தை இன்று தவற விட்டவர்கள் நாளை அவசியம் பாருங்கள். அருமையான அனுபவம்.
பின்குறிப்பு
நாளையும் தவறவிட்டால், பாட்டையா தன் குழுவினருடன் உங்கள் இல்லத்துக்கே வந்து நாடகத்தைப் போட்டுக் காட்டும் அபாயம் உள்ளது.
–Ks Suka
சுஜாதா அவர்கள் எழுதிய கடவுள் வந்திருந்தார் நாடகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். 90களில் என் கல்லூரி நாட்களில் கலாநிலையம் என்ற அமெச்சூர் நாடகக்குழுவில் நடித்தவன் நான். தமிழ் நாடகங்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலகட்டம் பற்றி பல மூத்த நடிகர்கள் நாஸ்டால்ஜியா பேசுகையில், வாஷிங்டனில் திருமணம், தனிக்குடித்தனம், ஊர்வம்பு, கால்கட்டு நாடகங்கள் பற்றி சிலாகித்து பேசுவார்கள். அந்த உரையாடல்களின் போது தவறாது இடம்பெறும் மற்றுமொரு நாடகம் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார். அந்த நாடகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டே 20 வருடங்களாகிவிட்ட நிலையிலும், அந்நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு மட்டும் அமையவேயில்லை.

இன்று (23.04.2013) மியூசியம் தியேட்டரில் அந்த வாய்ப்பு கிட்டியது. இன்றைக்கு 5 வருடங்கள் கூட தாங்காமல் ஊசிப்போகும் சினிமா, நாடகங்களின் நினைப்பில் சற்று பயந்துடனேயே அரங்கம் வந்து சேர்ந்தேன். கடவுள் வந்திருந்தார் அரங்கேறி 30 வருடங்களாகிவிட்டதே அதற்கு காரணம். ஆனால் நினைப்பு பொய்யானது. நாடகம் முழுக்க விரவிக்கிடக்கும் நகைச்சுவை இன்றும் புத்தம் புதுசாகவே இருந்தன. நாடகத்தில், மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல், உங்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் எதிர்கால மனிதனைப் போல, எங்கள் கண்களுக்கு ஒருவர் தெரிந்தார்.
அவர் தான் சுஜாதா.
அவர் என்றைக்குமே எதிர்கால மனிதன் தானே.
–Arun Swaminathan
சீனி மாமா, ஜோ, மாமி. மூவரும் நன்றாக நடித்திருந்தார்கள். பாரதி மணி அனாயாசமாக நடித்து புத்தகத்தில் படித்த அதே சீனி மாமாவை கண்முன்னே கொண்டுவருகிறார். இந்த வயதில் இந்த மெனக்கேடு ஆச்சர்யம்தான். பிராமண தமிழ் நீங்கலாக சுந்தரிடம் ஒரு குறையுமில்லை. வசுமதி பல இடங்களில் அதிதான் அதினாலதான் என்கிறார் (முறையே அதுதான் அதனால). பிராமண தமிழோ சுத்தம்!… இந்த பெண் தொடர்ந்து நாடகங்களில் நடித்தால் சோபிப்பார். மற்றபடி வேறெந்த குறையுமில்லாத நிறைவான நாடகம். நேரமோ 15 நிமிடங்களுக்குமேல் தாமதிக்காமல் 6.30க்கே தொடங்கிவிட்டார்கள். இன்று பார்க்கவிருப்பவர்கள் 6.15க்கே போவது நலம்.
–Srinivasan
Sujatha Irukkiraar — at Egmore Museum Theatre.
Really superb performance by Bharati Mani and Padmaja Narayanan. வாத்தியார் இன்னமும் வாழ்கிறார்.
Venkatasubramanian Ramamurthy (Rvs)

0 comments:

Post a Comment