Thursday, January 21, 2016

இந்தப்பதிவு சங்கீத ரசிகர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும்…

நான் விரும்பி எதிர்பார்க்கும் சங்கீத சீஸன் தொடங்கிவிட்டது. தில்லியிலிருக்கும்போது, ஒரு மாத லீவு எடுத்து, சென்னைவந்து டேரா போடும் நான், சென்னையிலிருந்துகொண்டே கச்சேரி விளம்பரங்களை பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த ‘தள்ளாத’ வயதில் தனியாக தினமும் கால் டாக்சி பிடித்து காலை லெக்சர்-டெமான்ஸ்ட்ரேஷன் தொடங்கி நாள் பூராவும் ஒவ்வொரு சபாவாக ஏறி இறங்கி சங்கீதப்பிரவாகத்தை அனுபவிப்பது என்பது சிரமமாக இருக்கிறது.
இதை இங்கே எழுதுவதன் நோக்கம் விருகம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி ஏரியாக்களில் இருக்கும் நல்ல உள்ளம் படைத்த, வாகன வசதியுடைய ரிட்டையர்டு ஆன ’சங்கீதப்பைத்தியங்கள்’ இந்த பழங்கிழத்தையும் கூட்டிச்சென்று கொண்டுவிடுவார்களா என்பதை ஆராயத்தான். எனக்கு ஆசை இருக்கிறது தாசில் பண்ண!
வெளி ஊரிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ இதற்காகவே சென்னை வரும் சங்கீத ரசிகர் ஒருவருக்கு என் வீட்டில் கெஸ்ட் ரூம் இருக்கிறது. அதில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம். போக வர வசதியாக இருக்கும். இன்னொரு போனஸ்….. தினமும் கேன்டீன் செலவுகளும் என்னதே! கச்சேரிகளில் கேட்கும் ராகங்களின் பெயர்களை உடனுக்குடன் என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்! மற்றபடி என்னால் அவர்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. நான் காரன்ட்டீ!
இதைப் படிக்கும் வாசகர்கள் யாராவது இந்த வருஷமாவது எனக்கு உதவி செய்தால், தலைப்பிலுள்ள ஸ்ரீ ராகத்தில் அமைந்த எந்தரோ-வை அபஸ்வரமாக பாடவும் தயார்!
என் செல்: 9444003332
அன்புடன்
பாரதி மணி (Bharati Mani)

0 comments:

Post a Comment