விஜய தசமியன்று Happy Reading! — at புது தில்லியில் சந்தோஷ் சிவன் தந்தை சிவனால் எடுக்கப்பட்டது.
நேற்று சரஸ்வதி பூஜையன்று காலை ‘அம்ருதா’ ஆசிரியர் திலகவதி, IPS அம்ருதா பதிப்பகம் வெளியிட்ட ‘முத்திரைக்கதைகள்’ வரிசையில் துரை. லட்சுமிபதி தொகுத்த ”க.நாசு. முத்துக்கள் பத்து” புத்தகத்தில் பத்து பிரதிகளை அனுப்பியிருந்தார். என்னைப்பற்றி ஒன்றுமே தெரியாத திலகவதிக்கு என் பங்குக்கு நான் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தை அனுப்பிவைத்தேன்.
பிற்பகல் அவரிடமிருந்து ஒரு போன் கால். ‘சார்! உங்க புத்தகத்தில் பாதி படித்துவிட்டேன்’ என்று ஆரம்பித்தார். ‘அம்மா! இன்னிக்கு சரஸ்வதி பூஜை. நாளைக்கு ஆரம்பித்திருக்கலாமே! தி.ஜா சொன்னதுபோல் சரஸ்வதி பூஜையன்று தான் நிறைய படிக்கத்தோன்றுகிறது. இல்லையா?’ என்றேன். ’எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை உங்களைப்பற்றி தெரிந்து கொள்ளாததைப்பற்றி வெட்கப்படுகிறேன்!’ என்று ஆரம்பித்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதையெல்லாம் விவரித்தால் அது T.P.-யாகஇருக்கும். வேண்டாம்! எனக்கு இன்னொரு தீவிர வாசகர் கிடைத்துவிட்டார்! (T.P = தற்பெருமை)
ஆமாம்…..இதை பதிவு செய்ய என்ன காரணம் என்று கேட்டாலும், ‘அது’வே தான்!
இந்த வரைபடம் நாகர்கோவிலில் நடந்த நாஞ்சில் மகள் திருமணத்தின்போது, என் நண்பர் ஓவியர் வள்ளிநாயகம் வரைந்தது.
0 comments:
Post a Comment