Friday, January 22, 2016

எஸ்கேஎஸ்மணி சார் என்றாலோ.எழுத்தாளர் கநா.சுவின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்குத் தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்னசாமி ஐயர் என்றாலும்., ‘பாபாவில் ரஜினியுடனும் ., ‘குரு க்ஷேத்திரத்தில்சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி.தெரியாத இன்னொரு விபரம்,பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோர் இவருடைய நண்பர்கள் என்பதுஇரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.
அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப் படங்களையும் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற புத்தகத்தில் அற்புதமாகப் பகிர்ந்திருக்கிறார் இவர்.இது உயிர்மையின் வெளியீடு.
புத்தகத்தின் அட்டைப்படம் வரைந்தவர் ஸ்ரீபதி பத்மநாபா.. ஒரு கிராமபோனின் படம் மிக அருமையான குறியீடு இது.. ஏனெனில் மணியின் இந்தப் புத்தகம் கிராமபோனில் கேட்கப்படும் மிக அருமையான பாடல்களைப் போல அரிதான கட்டுரைகளின் தொகுப்பு இது .
உயிர்மையின் மிகச் சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக நான் இதைக் கருதுகிறேன்.ஏனெனில் இது உண்மையான அனுபவங்களின் தொகுப்புஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்புஒருவர் எத்தனை வயதில் எழுத்தாளராகலாம் என்ற எல்லை கிடையாது என்பதை நிரூபித்த புத்தகம் இதுஜெயமோகன் தன் முன்னுரையில் எழுத வந்திருக்கும் இளம் எழுத்தாளர் மணியை வரவேற்பதாகச் சொல்லி கலகலப்பூட்டி இருக்கிறார்.
முன்னுரையாக ஜெயமோகன்நாஞ்சில் நாடன், இந்திரா பார்த்தசாரதி,வெங்கட் சாமிநாதன் ஆகியோரும்பின்னுரையாகவும் நட்புரையாகவும் அ.முத்துலிங்கம்,அம்ஷன் குமார்ஸ்ரீனிவாசன்கடுகுஇயக்குனர் சுகா.மனோகர்பத்மபூஷன் லால்குடி ஜிஜெயராமன்பாவண்ணன்.டெல்லி கணேஷ்வாஸந்தி.அசோகமித்திரன்,வேலு சரவணன்வெளி ரங்கராஜன்,சத்யராஜ்பிலெனின்கிருஷ்ணன் வெங்கடாசலம்,முத்துசாமிமு.இராமசாமிநீலபத்மனாபன்பேராசிரியர் எஸ்ராமானுஜம்.தியடோர் பாஸ்கரன்எஸ் ராமகிருஷ்ணன்மாதவன் என கிட்டத்தட்ட 28பிரபலங்கள் இவரின் நூலுக்கு தம்முடைய கருத்துக்களை வழங்கி இருக்கிறார்கள்..
18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.
1991 இல் இவரின் முதல் படம் பி.பி.சி எடுத்த எலக்ட்ரிக் மூன் முதல் படமே விருது வாங்கிய படம்இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்.. அதன் பின் இயக்குனர் லெனின்ஜெயபாரதிஞானசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறார்.இவர் நடித்த 40 படங்களில் 13 படங்கள் விருது பெற்றவைஅவற்றில் சில எலக்ட்ரிக் மூன்’, ‘பாரதி’, ‘ஊருக்கு நூறு பேர், ‘மொட்டுக்கா, ‘றெக்கை, ‘ஒருத்தி, ‘நண்பா நண்பா’, ‘ஆட்டோகிராஃப்’, ‘அந்நியன்.
கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால் கிட்டத்தட்ட 100ராகங்களுக்கு மேல் கண்டுபிடிக்கத் தெரியும்இசை விமர்சகர் சுப்புடுவே இவர்திறமையைப் பார்த்து ஆச்சர்யம் அடைவாராம்.
இவருடைய இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் ஒரு புத்தகமே எழுதலாம்இங்கே தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார்களாம்.
இலக்கியத்தில் இ.பா,  சுஜாதா ஆகியோருடன் பழகி இருக்கிறார்..ஜெயகாந்தனின் கதைதான் இவர் நடித்த ஊருக்கு நூறு பேர் என்ற படம்.
தஞ்சாவூர் எழுத்தாளர்களான திஜானகிராமன்லா..ராமாமிர்தம் போன்றவர்களின் எழுத்துக்கள் அந்த மாவட்டத்தின் வளப்பத்தையும்வசவையும் சிதறிச் செல்வதுபோல இங்கே மணியின் எழுத்துக்கள் நாஞ்சில் நாட்டின் வாழ்க்கையை அவ்வப்போது சிதறிச் செல்கின்றன.
கட்டுரைகளில் சில சுவாரசியமான வார்த்தைகள்: “40 வயது உலகம் சுற்றும் வாலிபனாய் இருந்ததுராஜீவ் காந்தியைப் பார்த்தால் தன் பாட்டி சொல்லும்ரோஸ்ஸாப்பூக்கலர் ஞாபகம் வந்ததுலஞ்சம் வாங்கியதாக 11பார்லிமெண்டரி உறுப்பினர்கள் மட்டும் மாட்டியபோது பாக்கி 531 உறுப்பினர்களும்லஞ்ச அரக்கனை ஒழித்துவிட்டோமென்று ஆனந்தக் கூத்தாடுவது.சுப்புடுவின் சர்ச்சைக்குரிய விமர்சனங்கள்.. என கிண்டல்களுக்குக் குறைவில்லை..
சர்ச்சைகளுக்கும் இதில் பஞ்சமில்லை.. அருந்ததி ராயும்பிரதீப் கிருஷ்ணனும் சிலநாள் திருமணமாகாமலே சேர்ந்து வாழ்ந்ததுபின் மணம் புரிந்து கொண்டது.கஸ்டம்ஸில் ஜனதா பீரியடில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ராஜீவ் காந்தியை சோதனை என்ற பெயரில் ஏறத்தாழ மணி நேரம் சோதனை செய்தது.தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் வீடுகள்,சர்வெண்ட் க்வார்ட்டர்ஸ்கார் காரேஜ் போன்றவை வாடகைக்கு விடப்படுவது டி.என்.ராஜரத்தினம் பிள்ளைகாருக்குறிச்சி பி.அருணாசலம் இவர்களுக்குப் பிறகு அதே சிறப்போடு நாதஸ்வரம் வாசிக்க யாருமில்லை எனவும்DNBS சார்பாக நடத்தப்படவேண்டிய நாடகம் ஒத்தி வைக்கப்பட்டது,ஆனால் அதற்கு சுப்புடு WELL DONE VAITHI FLOPS ” என விமர்சனம் எழுதியது எனவும் குறிப்பிடுகிறார் மணி.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்பதற்கு ஆ.மாதவன் கொடுத்த இந்திய வரைபடத்தின் விளக்கமும்ராமர் பாலம் தொடர்பான செய்திக்குப் பிறகு வானிலை அறிக்கை டி.வி.யில் படிக்கும்போது வாயில் சிகரெட்டோடு நேரு தெரிவதும் என இவரின் எழுத்தாற்றலுக்கு வேறென்ன சொல்ல.. !!
அன்னை தெரசாஷேக் ஹஸீனா மற்றும் தான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்.,டெல்லியின் நிகம்போத் சுடுகாடு, ‘செம்மீன்’ படம் தேசிய விருதுக்கு சேர்க்கப்பட்ட விபரம்சுஜாதாமொரார்ஜி தேசாய் மகன் காந்தி பாய் தேசாய்ரயில் பயணம்பங்களாதேஷ் நினைவுகள் அனைத்தும் அருமை.
கண்ணீர் வரவழைத்த கட்டுரைகளும் உண்டு.. 1984 இல் நடந்த வன்முறையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டது, மேலும் பூர்ணம் விசுவநாதன் பற்றியது.
டெல்லியின் கரோல்பாகில் பலகாலம் இருந்ததால் அங்கே இவர் குறிப்பிடும் ஹோட்டல்கள்கையேந்திபவன்கள் பற்றிப் படிக்கும்போது நேரில் பார்த்ததை எழுத்தில் பார்த்தது போல் இருந்ததுசாப்பாட்டுப் பிரியரான இவர் வெள்ளாயணி மாம்பழத்தையும் மோர்க்குழம்பில் சேர்க்கும் அப்பக்கீரையையும் எழுதி இருப்பது பற்றி இதைப் படித்தால் ரசிக்க முடியும்.
மேலும் டெல்லியில் விடுமுறைக்காக தமிழ்நாடு வருவதற்கு டிக்கெட் புக்கிங் செய்யும் முறை பற்றி (பாய் தலையணையோடு முதல்நாளே சென்று ஸ்டேஷனில் படுத்துக் கொள்வதுடோக்கன் வைத்துக் கொள்வது என்று)படித்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.. ஏனெனில் இந்தக் கஷ்டங்களை நாங்களும் அனுபவித்திருக்கிறோம்.
ஆரம்பத்தில் ஒரு பஞ்ச்நடுவில் ஒரு பஞ்ச்பின் முடிவில் ஒரு பஞ்ச் என தன் கிண்டல்களால் கட்டுரைகளுக்கு சுவாரசியம் சேர்க்கிறார் மணி.. தெரியாத தகவல்களை நாம் தெரிந்துகொள்ள செய்யும் பாங்கும் அருமை..:
ஒரு எழுத்தாளனது வெற்றியே படிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த சம்பவத்தை உணரும்படி செய்வது. அந்த அனுபவங்களோடு தன் அனுபவங்ளையும் ஒப்பிட்டு நோக்குவது என்பதுதான்அந்த வகையில் மணி மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்.
அடுத்து நீரா ராடியாவும் டெல்லியில் நான் செய்யாத திருகுதாளங்களும்என்ற கட்டுரையை உயிர்மையில் படித்தோம்.இதுபோல இன்னும் நிறைய அனுபவங்கள் பகிரப்படாமல் இருக்கின்றன இவரிடம்ஒன் புக் ஒண்டர் என்று இவர் தன்னை சொல்லிக் கொள்வார்இன்னும் பல புத்தகங்களை உள்ளடக்கிய புத்தகம் இவர்இன்னும் புத்தகங்கள் ‘உயிர்மையில் வெளியிட்டு மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.
பாரதிமணி (Bharati Mani)
ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட பாரதி மணியை, ஒரு முக்கியமான எழுத்தாளனாக அறிய செய்தவை, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தில்லி வாழ்க்கையில் பரந்துபட்ட அனுபவங்கள், இதுவரை எங்கும் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் அவரது தனித்துவமான மொழிநடையில் வாசகர்களை பெரிதும் உற்சாகம் கொள்ள செய்தன. இவை ஒரு தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் ஒரு காலகட்டத்தின் சரித்திரமாகவும் இருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.
–நன்றி உயிரோசை – உயிர்மை வழங்கும் இணைய வார இதழ்

0 comments:

Post a Comment