கடந்த பத்து நாட்களாக மழையால் சிறிதும் பாதிப்பில்லாமல் இரண்டாவது மாடியில் நின்றுகொண்டு மழையை ரசித்துக்கொண்டிருக்கிறேன். வெறுக்கத்தோன்றவில்லை…நகைமுரணாக இருந்தாலும்!
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடும் காரும் பத்தடித்தண்ணீரில் முழுகி, பேரிடர் படகில் கூவம் ஆற்றைக்கடந்து கோயம்பேட்டிலிருந்து தலையில் ஒரு பையை (இருமுடியாக) சுமந்து இடுப்பளவுத்தண்ணீரில் நடந்தே (18 படிகளுக்கு பதிலாக) 22 படியேறி என்னை சரணாகதியாக வந்த நண்பன் எனக்கு Blessing in Disguise! என் தனிமையைப்போக்க அந்த ஹரிஹரசுதன், ஆனந்தசித்தன், ஐயன் ஐயப்பன் அனுப்பிவைத்த கொடை இது! அவனுக்கும் சமைத்துப்போட்டு, நாள்பூரா பேசிக்கொண்டிருந்தோம் நாலு நாளாக. நண்பன் நேற்று மாலை பாண்டிக்குப்போய் சேர்ந்தான்.
மகள் அனுஷா இரண்டாம் தேதி சதாப்தியில் பெங்களூருக்கு டிக்கெட் ஏற்பாடு செய்திருந்தாள். ஸ்டேஷன் போகப்பிடிக்கவில்லை. புறமுதுகிட்டு ஓடுவது போல் பட்டது.
நேற்று மாலை டிபன் காலிஃப்ளவர் பக்கோடாவும் பில்டர் காபியும்!……குறையொன்றுமில்லை!
0 comments:
Post a Comment