Thursday, January 21, 2016

நேற்று கடல் பார்த்தேன். Super Bowl மற்றும் sunday night என்பதால் தியேட்டரில் கூட்டம் மிகக் குறைவு.
படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்கள்:
பாரதி மணி அசத்தியிருந்தார், தன் உடல் மொழி மற்றும் voice modulation-ல். முதலில் இளமையான தோற்றத்தில் பிறகு தற்போதுள்ள தோற்றத்தில்.
கடல் படத்தில் நடித்த கௌதம் -துளசி இருவருக்கும் நடிப்பு பயிற்சி அளித்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்? குணச்சித்திர நடிகையும், கூத்துப்பட்டறையில் முக்கியமானவருமான கலைராணிதான். ஆனால் சமீபத்தில் வெளிவருகிற கடல் தொடர்பான பேட்டிகள் எதிலும் கலைராணியின் பெயரை மறந்தும் கூட யாரும் உச்சரிப்பதில்லை.
ஒரு முறை முன்னணி வார இதழுக்கு துளசியின் அம்மா நடிகை ராதா கொடுத்த பேட்டியில் கூட என் மகளுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் சுஹாசினி என்றுதான் குறிப்பிட்டிருந்தார். இதில்  ரொம்பவே அப்செட் ஆனாராம் கலைராணி.
அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி மிகப் பொருத்தமான தேர்வு அவரவர்கள் பாத்திரத்திற்கு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் ஜெயமோகனின் வசனம் மற்றும் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு. முதலில் கஷ்டப்படுத்தும் வட்டார வழக்கு சிறிது நேரத்தில் பழகி விடுகிறது.
ஏற்கனவே super-hit ஆகி விட்ட ரெஹ்மானின் பாடல்களை படமாக்கிய விதம் பற்றி:
அடியே பாடல் படம் பிடித்த விதம் மகா சொதப்பல். இந்தப் பாடலைப் பாடியுள்ள Sid (dharth) Sriram எங்கள் Bay Area பையன். இவனுடைய அம்மா லதா ஸ்ரீராம் இங்கே பிரசித்தி பெற்ற carnatic music teacher.
மற்ற பாடல்கள் படமாகிய விதம் அருமை.
படத்தில் எனக்கு எரிச்சலூட்டிய ஒரே விஷயம் லக்ஷ்மி மஞ்சுவுக்கு (மோகன் பாபுவின் மகள்) குரல் கொடுத்த சுஹாசினி. நல்ல வேளை சுஹாசினி இந்தப் படத்திற்கு வசனம் எழுதவில்லை.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றால் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
கடல் திரைப்படம் பற்றி பாரதி மணி கூறுகிறார்…
உங்களைத்தவிர மற்ற எல்லோருமே கதைக்களன் தூத்துக்குடி/மணப்பாடு பக்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஷூட்டிங் தான் அங்கே நடந்தது. ஜெயமோகன் ஸ்க்ரிப்ட் படி அரவிந்த் சாமி போய்ச்சேரும் .பாதிரியார் பள்ளி குளச்சலில் இருக்கிறது. அது பாதிரியார் அறையில் இருக்கும் போர்டில் எழுதியிருக்கும். அதனால் படத்தில் பயன்படுத்தியிருக்கும் பேசுமொழி எண்பதுகளில் பேசப்பட்ட மலையாளம் கலந்த நாஞ்சில்நாட்டுத்தமிழ். நெல்லைத்தமிழ் அல்ல. படத்தில் நான் பேசும் முதல் வசனம்: ‘ஸங்ஙதி கொள்ளாம்!’ என்றிருக்கும். அது முழுக்க மலையாளப்பிரயோகம். ஷூட்டிங் போது, ’ஸ்க்ரிப்டில் உள்ளதை, சரியாகப்பேசினது நீங்க ஒருத்தர் தான்!’ என்று டைரக்டர் பாராட்டினார்.

மணி ரத்னம் படத்தை இப்படி அடித்துத் துவைப்பதற்கு அத்தனை அழுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். இன்று படம் பார்த்துவிடுவேன்.

0 comments:

Post a Comment