இப்போதைய உள்துறை அமைச்சர் திருவாளர் சுஷீல் குமார் ஷிண்டே முன்னால் மக்கள் தொடர்பு அதிகமில்லாத அமைச்சராக இருந்தார். பலமுறை மகாராஷ்டிரா முதலமைச்சராகவும் இருந்தவர். ஆங்கிலமோ ஹிந்தியோ அவருக்கு சரியான முறையில் கைகொடுக்காது. மனதில் ஒன்றை நினைத்து, சரியான வார்த்தைகள் இல்லாமல் ராபணா என்று பேசித்தொலைப்பார். உள்துறை அமைச்சரான பிறகு — இவருக்கு முன்னால் வாய்ச்சாலகரான சிவகங்கைச்சீமான் இருந்தார் — பலமுறை Foot in the mouth என்பார்களே அதுபோல் பேசியிருக்கிறார்! இதுவரை மாட்டிக்கொள்ளவில்லை! இனிமேல் ஈஸ்வரோ ரக்ஷது!
சமீபத்தில் இவர் உதிர்த்த சில பொன்மொழிகள்:
‘நான் உள்துறை மந்திரியாக வருமுன் அரசு எடுத்த முடிவுகளுக்கு நான் ஜவாப்தாரியல்ல!’
நாளை சத்தீஸ்கடில் 100 பேர் இறந்துவிட்டால், நான் அங்கே போகவேண்டுமா….என்ன?’
இந்தியா கேட்டுக்கு போய் மக்கள் குறையை கேட்க நானொன்றும் சாமான்யன் அல்ல!’
இவருக்கு சத்துரு வெளியில் இல்லை….இவர் நாக்கு தான்.
கூடிய சீக்கிரம் இவர் ஏடாகூடமாய்ப்பேசி, இந்த அமைச்சரகத்திலிருந்து மாற்றப்பட்டால், ஆச்சரியப்படாமல், “பாரதி மணி சார்! நீங்க அப்பவே சொன்னீங்க…..நீங்க ஒரு தீர்க்கதரிசி தான்!’ என்று என்னை மறவாமல் பாராட்டுங்கள்!
மறக்கவேண்டாம்!
0 comments:
Post a Comment