அன்புள்ள நண்பர்களே,
இதோ…..சென்னை அரங்கம் மேடையேற்றும் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தின் அழைப்பிதழ் உங்கள் கையில். மேள தாளத்தோடு, வெற்றிலை பாக்கு சகிதம் உங்களை அன்போடு அழைக்கிறேன். நாடக ஆர்வலர்கள் அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.
IPL கிரிக்கெட், குழந்தைகள் பரீட்சை, டி.வி.யின் ’விடுமுறை தினக் கொண்டாட்டங்கள்’ அனைத்தையும் மறந்து, வரும் 23, 24-ம் தேதி மாலை ம்யூசியம் தியேட்டரை நிரப்ப வாருங்கள். உங்கள் உன்னதமான மன மகிழ்ச்சிக்கு நாங்கள் ‘கேரன்டீ’! எண்பதுகளில் நான் தில்லியில் பலதடவை போட்ட எனக்குப்பிடித்த நாடகம். சுப்புடுவுக்கும்! அவர் ”60 Laughters a Minute!” என்று தலைப்பிட்டு தில்லி ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதினார். முப்பது வருடத்திற்குப் பிறகும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறேன்.
ஒரு நல்ல நாடகம் போடுவது ஒரு கல்யாணம் பண்ணிப்பார்ப்பதையும், வீடு கட்டுவதையும் விட சிரமமான காரியம்!
அனைவரும் வாருங்கள்!…………ஊர் கூடி தேர் இழுப்போம்!
அன்புடன்,
பாரதி மணி
0 comments:
Post a Comment