Saturday, January 30, 2016

நண்பர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள்தான் முதன்முதலில் திரு பாரதி மணி அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னார். "மிகவும் பெரிய மனிதர், சுவாரஸ்யமானவர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அவரை அவசியம் சென்று பார்க்க வேண்டும். ஒரு நாள் போகலாம்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நேரில் சந்தித்த முதல்நாளிலேயே நாஞ்சில் சார் சொன்னது அவ்வளவும் உண்மை என்று தெரிந்தது. அவர் முன் நாம் சௌகர்யமாக இருக்கலாம். தோன்றும் எதைப் பற்றியும் பேசலாம். கவனமாகக் கேட்கும் செவிகளை உடையவர்.  தான் பேச பிறர் கேட்க வேண்டும் என்கிற சில பெரிய...
‘ஒருத்தி’ படத்தில் பாரதி மணிக்கு கீதாரியாக முக்கிய வேடம் கொடுத்தேன். திரைப்பட நடிகர்கள் அவர்கள் வேடத்தைப் புரிந்து கொண்டு இயக்குநரின் வழிகாட்டலுடன் தங்கள் பாணியில் அதை செய்து விடுவார்கள். மணி விஷயத்தில் நான் படக்கதை முழுவதையும் எடுத்துக் கூறி அவரது கதாபாத்திரம் பற்றியும் நிறைய தெளிவு படுத்தினேன். படத்தில் அவரது    நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.  இருந்தாலும் நாடகத்தில் நடிப்பது போலவே படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தானே படித்து பிறகு அதில் வரும் தனது கதாபாத்திரத்தை மனதில் உருவாக்கி...
இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி திரைப்படம் வெளியானபோது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் நான் அதைப் பார்த்தேன். படத்தில் கதை சொல்லப்பட்டவிதம், பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேயின் தோற்றப் பொருத்தம், செல்லம்மாவாக நடித்த தேவயானியின் அடக்கமான நடிப்பு, இளையராஜாவின் இசை எல்லாமே பாராட்டும்படியாக அமைந்திருந்தன.  பாரதியின் தகப்பனாராக நடித்தவர் மிக சொற்ப நேரமே திரையில் வந்து போன ஒரு புதுமுகமாக...

Friday, January 29, 2016

நான் முதன் முதலாக மணியை (எங்களுக்கு அவர் வெறும் மணிதான். S.K.S. மணியோ, பாரதி மணியோ அல்லர்) பார்த்த நினைவு 1960-ன் ஆரம்பமாக இருக்கவேண்டும். புது டெல்லி கரோல்பாகில் வைத்தியநாதய்யர் மெஸ்ஸில் தங்கி இருந்த போது, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் இருந்த ஹால் போன்ற பெரிய அறையில், (நான்கு கட்டில்கள் போடப்பட்டிருக்கும் அதில்) தங்கியிருப்பவரைப் பார்த்துப் பேச அளவளாவ வினே நகரிலிருந்து வருவார். மணி ஸ்கூட்டரை...
1970 என்று நினைக்கின்றேன். அன்று தில்லியில், ரஃபி மார்கிலிருந்த ஐஃபாக்ஸ் (AIFACS) அரங்கில் தட்சிண பாரத நாடக சபாவினர் ஒரு புதிய நாடகம் மேடையேற்றுவதாக இருந்தனர். அன்று மாலை ரீகல் பார்க்கில், ராஜாஜியின் தலைமையில் 'சோ' பேசுவதாக இருந்தார். கூட்டம் ஐந்தரை மணிக்கு. நாடகம் ஏழு மணிக்கு. தமிழர்கள் யாரும் நாடகம் பார்க்க வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தனர் பலர். ஆனால், ஒரே ஒருவர்தான், புதிய நாடகம் பார்க்க...