உயிர்மை பத்திரிகையில் பாரதி மணி எழுதியவைகளைப்
படித்துவிட்டு, இன்று பலரும் அவருக்கு ரசிகர்களாயிருக்கிறார்கள். ஆனால் ஒரு
நாடகக்காரனிடம் இவ்வளவு அனுபவச்சேகரிப்புகள் இருப்பது குறித்து ஆச்சரியப்பட என்ன
இருக்கிறது? சுற்றியுள்ள மனிதர்களையும், சிக்கலான மனித நிலைமைகளையும் பதட்டமின்றி
கூர்ந்து கவனித்து எதிர்கொள்ளக்கூடிய அதிகபட்ச வாய்ப்புகள் பெற்றவன் அல்லவா அவன்?
அத்தகைய வாய்ப்புகள் கைவரப்பெற்ற நிலையில், லகுவாகத் தன்னை இருத்திக்கொண்ட
நாடகக்காரர் பாரதி மணிக்கு இந்த அனுபவச்சேகரிப்புகளும், சொல்லாடல்களும் இயல்பாகத்
துணை நிற்பவை தானே! கூடுதலாக, இலக்கிய அனுபவங்களைத் தேடி நாடோடியாக
அலைந்து திரிந்த க.நா. சுப்ரமண்யத்தின் மருமகனுக்கு அந்த இலக்கிய ஆளுமையின்
பாதிப்புகள் இல்லாமல் போகுமா என்ன? வரலாற்றையும் கலாச்சாரத்தையும் காலத்தின்
நினைவுகளிலிருந்து மீட்டெடுப்பவர்கள் கலைஞர்கள் தானே! பாரதி மணிக்கு என் உளமார்ந்த
பாராட்டுகள்.......
--நாடக வெளி ஆசிரியர் வெளி ரங்கராஜன்.
**** ***** ****
0 comments:
Post a Comment