Monday, February 1, 2016

இளமைக்கால அனுபவங்கள் முதல் பணியிடங்களில் பெற்ற அனுபவங்கள் வரை, அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் பாரதி மணியின் கட்டுரைகள் இலக்கிய நயம் மிகுந்தவை. மனிதர்களைப்பற்றியும் இடங்களைப்பற்றியும் அவர் ஒருசில சொற்றொடர்களை மட்டுமே பயன்படுத்தி மிக அழகான ஒரு சித்திரத்தைத் தீட்டிவிடுகிறார். தான் பிறந்த பார்வதிபுரம், அனந்த பத்மநாபஸ்வாமி ஆலயம், தில்லியின் மின்சாரச் சுடுகாடு, வெளிநாட்டு விடுதிகளின் குளிரூட்டப்பட்ட அறைகள் என அவர் கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும் எல்லா இடங்களும் மறக்கமுடியாத காட்சிப்படங்களாக நம் மனத்தில் பதிந்துவிடுகின்றன. நேர்த்தியாக வடிவமைக்கப்படும் மேடை நாடகக் காட்சியைப்போல ஒவ்வொன்றும் வலிமையாகவும் அழுத்தமாகவும் உள்ளது. நாடகத்துறையில் அவர் பெற்றிருக்கும் ஆழ்ந்த திறமை எழுத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. நபர்களின் சந்திப்புகளையும் உரையாடல்களையும் அவர் எழுதியிருக்கும் விதம் மிகத்திறமையாக முன்வைக்கப்படும் நாடகக்காட்சிகளைப்போல உள்ளன. உன்னதங்கள், கீழ்மைகள், நட்பு, பகை, அரசியல்வாதிகள், அப்பாவிகள் என பல தளங்களையும் மாறிமாறி அவர் நம்முடன் பகிர்ந்துகொள்ளும்போது ஏதோ ஒரு உத்வேகம் மிகுந்த கணத்தில் வாழ்க்கையே ஒரு நாடகமேடை என்பதை நம் மனம் கண்டடைகிறது.........
--எழுத்தாளர் பாவண்ணன்.

            *****                           *****                            ******


0 comments:

Post a Comment