எஸ்.கே.எஸ். மணி அவர்களை நினைக்கும்போது எனக்கு இரு
விஷயங்கள் கண் முன் நிற்கும். ஒன்று, அவருடைய தன்னம்பிக்கை. இரண்டு, புதுப்புது
பரிசோதனைகள் புரிய தயங்காதிருக்கும் இயல்பு. அயராத உழைப்பும், உரிய நேரத்தில்
பணியை முடிப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வமும் எனக்குத்தெரியும். அவரது
திரைப்படப்பங்கை நான் அதிகம் அறிய வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் 1973-ல் அவரது D.B.N.S. குழு சென்னைக்கு வந்து அரங்கேற்றிய நான்கு நாடகங்களையும் பார்த்து
ரசித்திருக்கிறேன். பிறகு தில்லி தேசிய நாடகப்பள்ளி சென்னையில் ஒத்திகை பார்த்து
அரங்கேற்றிய ராமானுஜர், மஹா நிர்வாணம் நாடகங்களைப்பார்த்து
வியந்திருக்கிறேன். அந்த நாடகங்களுக்கு மணி அவர்கள் ஒரு வழிகாட்டி.
அவர் மிகப்பக்குவமான நோக்கு கொண்டவர் என்பது அவருடைய
கட்டுரைத்தொடரில் சிறப்பாக வெளிப்பட்டது. உயிர்மை அவருடைய கட்டுரைகளுக்கு
நூலுரு தருவது மிகவும் அவசியமானது. எழுத்தாளர் பாரதி மணி, பதிப்பாளர்
மனுஷ்யபுத்திரன் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்............
--எழுத்தாளர் அசோகமித்திரன்.
**** ***** ****
0 comments:
Post a Comment