மிக உயர்ந்த தமிழ்நாடக நடிகரான திரு. பாரதி மணி அவர்கள்
மெல்லமெல்ல வருடும் நீர்விரல்களால் தன் சந்திப்புகள், நட்பு, அனுபவங்கள்
யாவற்றையும் எத்தனை ஆச்சரியமான கதை நிகழ்வுகளாக எழுதிக்கொண்டு போகிறார். இவர்
கட்டுரைகளில் தான் எத்தனை சம்பவங்கள் எத்தனை அதிசயங்கள்! ஓயாமல் பெருகும்
நினைவலைகள்! இந்த கொலம்பஸின் கப்பலில் பயணம் செய்த சிறுவனாக நான் இருக்கக்கூடாதா
என்று தினமும் ஏங்கியிருக்கிறேன்.
நடிப்பில் யானையான பாரதி மணி அவர்களை எனது பேராசிரியர்
இந்திரா பார்த்தசாரதி மற்றும் திரு. வெங்கட் சாமிநாதன் ஆகியோரோடு பார்க்கும்போது,
கொலம்பஸின் கப்பலில் இருப்பது போல உணர்ந்திருக்கிறேன். இவரது உருவமும்
உரையாடல்களும் என்னை அப்படி ஓர் உலகிற்கு அழைத்துச்செல்கின்றன.
துளித்துளியாய் எவ்வளவு சேகரித்திருக்கிறார் இந்த
மகத்தான நடிகர்! இவரது புதிர் போடும் உலகையும், மனிதர்களையும் படித்துக்கொண்டே
இருக்கவேண்டும் போலிருக்கிறது.........
--குழந்தைகள் நாடக இயக்குநர் வேலு சரவணன்.
**** *****
RSS Feed
Twitter
11:32 AM
பாரதி மணி
Posted in
0 comments:
Post a Comment