நாடகமே உலகம்
நாடி, நரம்பு, நடிப்பு
மனிதனை மகிழ்வித்த, ஆசுவாசப்படுத்திய, சிந்திக்கத் தூண்டிய தாய்க்கலையான நாடகக்கலையின் ஆளுமைகளைச் சந்திக்கும் மேடைதான் இந்த நாடகமே உலகம் !
‘உங்களுக்கு, ஜெயகாந்தன் மாதிரி இன்டலெக்ச்சுவல் அரொகன்ஸ் கொஞ்சம் இருக்கு’ என்று நண்பர் ஒருமுறை சொல்ல, ‘கொஞ்சம் இல்லீங்க, நிறையவே இருக்கு. அப்புறம் இன்டலெக்ச்சுவல் எல்லாம் இல்லை, வெறும் அரொகன்ஸ் மட்டும்தான் இருக்கு!’...
Sunday, February 14, 2016
Monday, February 1, 2016



அப்ப்ப்பா! ரொம்ப குளிருதே! ஏக ஐஸ் மழை! ஆமாம், இந்த
நல்ல நண்பர்களெல்லாம் யாரைப்பற்றி சொல்கிறார்கள்? சத்த்தியமா, அது நான் இல்லை!
எனக்கு தில்லிக்குளிரும் பிடிக்கும். புகழுரைகளும் அதை
விட பிடிக்கும். ஆண்டவனே ஸ்தோத்திரத்துக்கும் முகஸ்துதிக்கும் அடிமையாவானாம்...
நான் எம்மாத்திரம்? I am really humbled.
இந்த நிறைந்த உள்ளங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய
முடியும்? என்னால் நன்றி சொல்லத்தான் முடியும்....



We cannot change our memories, but we can change their
meaning and the power they have over us" - David Seamands
சிலரின் அறிமுகங்கள் முதல் சந்திப்பிலே நெருக்கம்
கொண்டுவிடுகின்றன. அப்படி அறிமுகமானவர் தான் டெல்லி மணி. அப்போது அவர் பாரதி
மணியாக அவதாரம் எடுக்கவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுபமங்களா நாடகவிழாவின் போது க.நா.சு.வின் மருமகன் என்று கோமல் சுவாமிநாதன் அவரை அறிமுகம்
செய்து...


க.நா.சு. தமிழின் இலக்கிய வரலாற்றில் பிரும்மரிஷி
பிரதிஷ்டை பெற்றவர். அவரது புதல்வியை மணந்தவர், திருவனந்தபுரத்துக் காரர் எனும்
அறிமுகத்துடன் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இங்கே எனது சாலை
வட்டார வியாபாரஸ்தலத்தில் வந்து படியேறினார் இப்போதைய பாரதி மணி. எங்கள் பேச்சு
அப்போது அவர் படித்து முடித்திருந்த எனது நாவல் கிருஷ்ணப்பருந்து பற்றியே
இருந்ததாக ஞாபகம். அதன்பிறகு திருவனந்தபுரம் வரும்போதெல்லாம், நான் கடையில் இல்லாத
சமயமாகப் பார்க்க வருவார்.
சமீபத்தில் பாரதி மணி உயிர்மை, தீராநதி போன்ற
இதழ்களில்...


அருந்ததி ராய் எழுதி ப்ரதீப் கிருஷன் இயக்கிய
The Electric Moon என்ற ஆங்கிலப்படத்தை பதினைந்து
ஆண்டுகளுக்குமுன் பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தபோது, மனதில் நின்ற பாத்திரங்களில்
சில நிமிடங்களே வரும் ஒரு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஒன்று. பாரதி மணி நடித்திருந்தார். படம் முடிந்தவுடன்,
கிரெடிட்ஸில் S.K.S. Mani என்று
குறிப்பிடப்பட்டிருந்த்தைக் கவனித்தேன். பல வருடங்கள் கழித்து, ‘பாரதி’ பட்த்தில் தோன்றி...


பாருக்குள்ளே எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில்
பாரதி மணியும் ஒருவர். க.நா.சு.வின்
மாப்பிள்ளை என்று தொடங்கிய அவரது அறிமுகம் விரிந்து விரிந்து நின்றது. அவர் ஒரு நாடகக் கலைஞர், நடிகர், கர்நாடக இசை
மற்றும் இலக்கிய ரசிகர் என தனது தனித்துவம்
மிக்க தகுதிகளின் விரிவாக்கமாக அந்த அறிமுகம் நீடித்தது. ஆங்கிலத்தில் அவர் தமது பெயரைப் பாரதி மணி என்று எழுதும் போது Bharati Mani என்றுதான் எழுதுகிறார். அப்படித்தான் எழுத வேண்டும் என்கிறார். காரணம் பாரதி அப்படித்தான் எழுதினார் என்கிறார். சொல்லின் வன்மையை
நன்கு புரிந்தவன்...


வாழ்க்கைப்பயணத்தில் யந்திரகதியில் என்ன தான் படித்து
பட்டம் பெற்று வேலையேற்று வாழ்ந்து முடித்துக்கொண்டிருந்தாலும், சற்றும்
எதிர்பாராத இடத்தில், நேரத்தில், பள்ளியில் நம் கூடப்படித்த ஒரு இளம்
நண்பனைச்சந்திக்க நேர்ந்தால் நாம் அடையும் மகிழ்ச்சியும் உள்ளக்கிளர்ச்சியும்
அலாதியானது. அத்தகைய ஒரு மானசீக அதிர்வுக்கு நான் ஆளான தருணம், மணியை
இந்தியத்தலைநகரில் Gandhi Peace Foundation-ல் வைத்து பல
ஆண்டுகளுக்கு...


எந்த எதிர்பார்ப்பையும் உத்தேசிக்காமலேயே
சிலரின் பேச்சு, பழக்க வழக்கங்கள் நமக்குப் பிடித்துப்போய்விடுகின்றன. அப்படி
பிடித்துப்போனவர்களில் ஒருவர் பாரதி மணி என்பதை என்னால் எந்த இடத்தில் நின்றும்
உரத்துக்கூறமுடியும். எண்பதுகளில் நான் டெல்லி சென்றிருந்த ஒரு தருணத்தில், அங்கு
நடைபெற்ற கணையாழி வாசகர் வட்டக் கூட்டத்தில், இந்தப் பெரியவரையும் நான்
பார்த்திருந்தது நினைவில் வந்துபோகிறது. அவ்வளவே! ஆயின், 1992 முற்பகுதியில், நிஜ
நாடக இயக்கத்தின் 14-ம் ஆண்டு நாடகவிழாவின்போது, சி.சு. செல்லப்பாவின் முறைப்பெண்
நாடகம்...


My friend, SKS Mani – A legend , icon and lode star – in the firmament of Indian Arts especially Tamil theatre in Delhi and its ramifications !
It is rather difficult for me to write about him in a few lines. I have known him since the 1960s. First time I met Mani in Delhi when I performed with my Guruji Padmabhushan Late Chembai Vaidyanatha Bhagavathar at the Delhi...


மணி அவர்களை நான் இரண்டு வகையில் அறிவேன்.
ஒன்று நடிகராகவும் இன்னொன்று க.நா.சு.வின் மாப்பிள்ளையாகவும். முதலில் அவரை
நடிகராகத்தான் அறிந்தேன். டில்லியின் நாடகக்காரர்களில் ஒருவராகவும் நாடகக்காரரான
பென்னேஸ்வரரோடு சம்பந்தப்பட்டவராகவும் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில்
பெரும்பங்கு கொண்டவராகவும் அதில் நடித்தவராகவும் அறிவேன்.
அதற்கு
முன்னதாகவே க.நா.சு.வின் மகளை சென்னையிலேயே அறிவேன். நான் மட்டுமல்ல, கவிஞர் சி.மணியும் நானும் அவர் சிறு பெண்ணாக நல்லதம்பி
தெருவின் இரண்டாம் இலக்கமிட்ட வீட்டில் பாவாடை...
Subscribe to:
Posts (Atom)