நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு...
Friday, June 17, 2016


இந்த தலைப்பு ஓர் ஆச்சர்யத்தின் வெளிப்பாடு!
ஒரு ரசனையான மனிதனின் பல பரிமாணங்களை கண்டு வியந்து போனதின் விளைவு.
ஆமாம் இன்றைய பொழுது முழுதையும் என்னை ஆக்கிரமித்த ஒரு நூல் ஏற்படுத்திய பிரமிப்பு.
காலையில் சென்னை புறப்பட்டு கொஞ்ச நேரம் முன்புதான் வந்து சேர்ந்தேன். இடையில் இரண்டு மணி நேரம் காரிலேயே காத்திருப்பு. ஆனால் ஒரு நிமிடம் கூட அலுப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டது
"புள்ளிகள்,...
Saturday, May 7, 2016



ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்ததால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ணமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டுரைகளை படித்தபோது நிச்சயமாக எதையோ தவற விடுகிறோம் என்று தோன்ற வைத்து, பிறகு முழுதும் படிக்கச் செய்தது..அனுபவம் கனிந்த மனிதனே புத்தகம் ஆகிறான் என்பதை ருசுப்பிக்கும் புத்தகம் இது. அனுபவ அறிவு கட்டுரைகளாக மாறும்போது டைரிக் குறிப்பாகவோ தகவல்...
Sunday, February 14, 2016


நாடகமே உலகம்
நாடி, நரம்பு, நடிப்பு
மனிதனை மகிழ்வித்த, ஆசுவாசப்படுத்திய, சிந்திக்கத் தூண்டிய தாய்க்கலையான நாடகக்கலையின் ஆளுமைகளைச் சந்திக்கும் மேடைதான் இந்த நாடகமே உலகம் !
‘உங்களுக்கு, ஜெயகாந்தன் மாதிரி இன்டலெக்ச்சுவல் அரொகன்ஸ் கொஞ்சம் இருக்கு’ என்று நண்பர் ஒருமுறை சொல்ல, ‘கொஞ்சம் இல்லீங்க, நிறையவே இருக்கு. அப்புறம் இன்டலெக்ச்சுவல் எல்லாம் இல்லை, வெறும் அரொகன்ஸ் மட்டும்தான் இருக்கு!’...
Monday, February 1, 2016



அப்ப்ப்பா! ரொம்ப குளிருதே! ஏக ஐஸ் மழை! ஆமாம், இந்த
நல்ல நண்பர்களெல்லாம் யாரைப்பற்றி சொல்கிறார்கள்? சத்த்தியமா, அது நான் இல்லை!
எனக்கு தில்லிக்குளிரும் பிடிக்கும். புகழுரைகளும் அதை
விட பிடிக்கும். ஆண்டவனே ஸ்தோத்திரத்துக்கும் முகஸ்துதிக்கும் அடிமையாவானாம்...
நான் எம்மாத்திரம்? I am really humbled.
இந்த நிறைந்த உள்ளங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய
முடியும்? என்னால் நன்றி சொல்லத்தான் முடியும்....



We cannot change our memories, but we can change their
meaning and the power they have over us" - David Seamands
சிலரின் அறிமுகங்கள் முதல் சந்திப்பிலே நெருக்கம்
கொண்டுவிடுகின்றன. அப்படி அறிமுகமானவர் தான் டெல்லி மணி. அப்போது அவர் பாரதி
மணியாக அவதாரம் எடுக்கவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுபமங்களா நாடகவிழாவின் போது க.நா.சு.வின் மருமகன் என்று கோமல் சுவாமிநாதன் அவரை அறிமுகம்
செய்து...


க.நா.சு. தமிழின் இலக்கிய வரலாற்றில் பிரும்மரிஷி
பிரதிஷ்டை பெற்றவர். அவரது புதல்வியை மணந்தவர், திருவனந்தபுரத்துக் காரர் எனும்
அறிமுகத்துடன் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இங்கே எனது சாலை
வட்டார வியாபாரஸ்தலத்தில் வந்து படியேறினார் இப்போதைய பாரதி மணி. எங்கள் பேச்சு
அப்போது அவர் படித்து முடித்திருந்த எனது நாவல் கிருஷ்ணப்பருந்து பற்றியே
இருந்ததாக ஞாபகம். அதன்பிறகு திருவனந்தபுரம் வரும்போதெல்லாம், நான் கடையில் இல்லாத
சமயமாகப் பார்க்க வருவார்.
சமீபத்தில் பாரதி மணி உயிர்மை, தீராநதி போன்ற
இதழ்களில்...


அருந்ததி ராய் எழுதி ப்ரதீப் கிருஷன் இயக்கிய
The Electric Moon என்ற ஆங்கிலப்படத்தை பதினைந்து
ஆண்டுகளுக்குமுன் பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தபோது, மனதில் நின்ற பாத்திரங்களில்
சில நிமிடங்களே வரும் ஒரு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஒன்று. பாரதி மணி நடித்திருந்தார். படம் முடிந்தவுடன்,
கிரெடிட்ஸில் S.K.S. Mani என்று
குறிப்பிடப்பட்டிருந்த்தைக் கவனித்தேன். பல வருடங்கள் கழித்து, ‘பாரதி’ பட்த்தில் தோன்றி...


பாருக்குள்ளே எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில்
பாரதி மணியும் ஒருவர். க.நா.சு.வின்
மாப்பிள்ளை என்று தொடங்கிய அவரது அறிமுகம் விரிந்து விரிந்து நின்றது. அவர் ஒரு நாடகக் கலைஞர், நடிகர், கர்நாடக இசை
மற்றும் இலக்கிய ரசிகர் என தனது தனித்துவம்
மிக்க தகுதிகளின் விரிவாக்கமாக அந்த அறிமுகம் நீடித்தது. ஆங்கிலத்தில் அவர் தமது பெயரைப் பாரதி மணி என்று எழுதும் போது Bharati Mani என்றுதான் எழுதுகிறார். அப்படித்தான் எழுத வேண்டும் என்கிறார். காரணம் பாரதி அப்படித்தான் எழுதினார் என்கிறார். சொல்லின் வன்மையை
நன்கு புரிந்தவன்...
Subscribe to:
Posts (Atom)