Sunday, October 8, 2017

"புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" -பாரதி மணி. ”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”. ”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!)...
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி Unexpected compliments from unknown readers do add some momentary pep in an early morning! அன்புள்ள தன்ராஜ், குடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டாலும், இதுபோன்ற வாசகர் கடிதங்கள் எனக்கு சற்று போதையை தருகின்றன என்பதை மறுக்கமுடியாது!... ஏனோ இக்கடிதத்தை இருமுறை படித்தேன். உங்களுக்கு என் நன்றி! பாரதி மணி =============================================== அன்பின்...

Friday, October 6, 2017

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்—பாரதி மணி  இப்புத்தகம் ஒரு தொகுப்புகளின் தொகுப்பு;  பாரதிமணியின் கட்டுரைகள், பதிவுகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், உரைகள், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகிய அனைத்தையும் வகைவாரியாகத் தொகுத்து அவற்றை ஒரே தொகுப்பு நூலாக வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். பார்வதிபுரம் மணி அல்லது தில்லி மணி அல்லது S.K.S.மணியாக இருந்தவர் பாரதி (2000) திரைப்படத்தில் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயராக நடித்துப் பரவலாக அடையாளம் காணப்பட்டதால் அத்திரைப்படப்பெயரை முன்பெயராக...

Thursday, October 5, 2017

நானே சொல்கிறேன்…..இது ஒரு மொண்ணையான கட்டுரை. நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும், வெண்ணையைக்கூட நாலைந்து தடவை மேலும் கீழும் அழுத்தி வெட்டினாலும் வெட்டாத மொண்ணைக்கத்தி மற்றும் Peeler பீலரைப்பற்றியது. நான் எழுதிய மொக்கைக்கட்டுரைகளில் இதற்கு முதலிடம் கிடைக்கும்! டி.எம்.எஸ்ஸோ யாரோ பாடிய பாட்டு ரேடியோவில் வரும்: ‘நல்ல மனைவி அமைவதெல்லாம்.....இறைவன் கொடுத்த வரம்!’....அவன் தயவில்லாமலே நல்ல மனைவி கூட அமைந்துவிடலாம். ஆனால் மார்க்கெட்டில் நீடித்து உழைக்கும் ஒரு நல்ல கத்தி அல்லது பீலர் கிடைப்பது...