Sunday, June 3, 2018

மாற்று நாடகவிழா முடிந்து நேற்று பெங்களூர் திரும்பினேன். திருப்பத்தூர் நண்பர் Tpg Balaji கொடுத்துவிட்ட இரண்டு பலாக்காய்களில் ஒன்று பலாக்காய் பொரியல் (இடிச்சக்கை துவரன்) ஆகிவிட்டது! ஆக்கம்:: பாரதி மணி. செய்முறை:: சின்ன பலாக்காய் ஒன்றை தோல் சீவி, பிசின் வரும் நடுத்தண்டையும் களைக. சின்ன சதுரத்துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள்பொடி, கொஞ்ஞ்சம் சர்க்கரை போட்டு வேகவைக்கவும். ஆறியபின் வடித்தெடுத்து...

Wednesday, May 23, 2018

சந்திரா ஸ்வாமி! இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்.....சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம். நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’...

Monday, January 8, 2018

மணி சார்!.... அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-----இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்... -----------------------------------------------------இரா.குமரகுருபரன்-------------------------- எவ்வளவு அருமையான நாள் ஜனவரி ஏழு !...பாரதி மணி சாரை விட, அவரது ரசிகர்களுக்கும்........எனக்கும் !   அவசர அவசரமாக, அலுவலகத்தில் பணியை முடிக்காமலேயே,மவுண்ட் ரோட்டில் வேலை இருப்பதாகச் சொல்லி, அனுமதியுடன்...

Tuesday, November 21, 2017

“இனிமெ உங்களை கூப்பிடமாட்டாங்களா.......அப்பா?” என திடீரென என் மகள் அனுஷா கேட்டாள். ஒருகணம் எதற்கு இந்தக்கேள்வி என திகைத்து, மறுகணமே புரிந்துகொண்டு, “அரசியலைத்தவிர மற்ற எல்லாத்துறையிலும்........ஆர்ட் அன் கல்ச்சருக்கும் வயது வரம்பு உண்டும்மா!” என்று பதிலளித்தேன். நேற்று பிற்பகல் IFFI-2017 Goa International Film Festival துவக்கவிழாவின் நேரலை ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவள் கேட்ட திடீர்க்கேள்வி! நான்...

Wednesday, November 8, 2017

போனவருடம் இதே நாளில் -- நவம்பர் 8, 2016 -- பெங்களூர் சக்ரா மருத்துவமனையில் முதுகுத்தண்டு ஆபரேஷனுக்காக --  Laperoscopic Decompression Surgery of L4, L5 S6 of Spine -- மாலை ஏழரை மணிக்கு அட்மிட் ஆனேன். அடுத்தநாள் காலை 10.30-க்குத்தான் ஆபரேஷன். பொழுதுபோகாமல் என் அறையிலிருந்த டிவியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென இரவு...

Wednesday, November 1, 2017

 புகழ்பெற்றிருக்கும் பாரதி மணி மிகச்சிறந்த சமையல்கலைஞரும் கூட. வாழ்வில் எனக்கு எல்லாமும் கிடைத்துவிட்டது என்று பெரும்நிம்மதியுடன் வாழும் இந்த 77 வயது இளைஞரை அந்திமழை இதழுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். அவரே செய்த பூசணிக்காய் அல்வாவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னவர், தன் சமையல், சாப்பாட்டு நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தார்:  சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ...

Sunday, October 8, 2017

"புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" -பாரதி மணி. ”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”. ”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!)...